ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது : உக்ரைன் அதிபர்
படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தாக்குதல் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அவருடன் சென்றுள்ளார். அவருடன் ஐநா பொதுச் செயலாளரும் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் துருக்கி மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் உக்ரைனின் கார்கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 17 பேர் ஒரே இரவில் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்துவது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





