--- --:--:-- --

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

2

மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon