--- --:--:-- --

வானத்தில் தோன்றும் முன்பே வயல்வெளியில் தெரிந்த நிலா..! அதிசய நிகழ்வு..!

5

துரை உசிலம்பட்டி அருகே முழுநிலா வானத்தில் தோன்றும் முன்பே வயல்வெளியில் தேங்கிய நீரில் தென்பட்டதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நேற்று மாலை 6.30 மணி வாக்கில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

 

இந்த சூழலில் கிழக்கு வானில் நிலா தோன்றும் முன்பே உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி வயல்வெளியில் தேங்கியிருந்த நீரில் முழு நிலவின் பிரதிபலிப்பு நிலவைப் போலவே காட்சியளித்தது. ஐந்து நிமிட கால அளவுக்கு வயல்வெளியில் பிரதிபலித்த நிலவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

 

இதையடுத்து சாரல் தூர தொடங்கியதால் வயல்வெளியில் நிலவின் பிரதிபலிப்பை காணமுடியவில்லை. முகில் கூட்டம் விலகியதையடுத்து வானத்தில் நிலா பிரகாசமாக தோன்ற தொடங்கியது.

 

வானத்து நிலவு தோன்றும் முன்பு பூமியில் தென்பட்ட நிகழ்வை பொது மக்கள் அதிசயமாக கண்டு சென்றனர். மக்கள் மத்தியில் ஒருவித பரவசத்தை இது ஏற்படுத்தியது.

Leave a Reply

Right Menu Icon