விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பிரச்சனையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை..!
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திவந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் போராட்டம் தொடரும் என விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
டெல்லியை முடக்கும் வகையில் பிரதான எல்லைகளில் போராட்டத்தை தொடர்ந்து இருக்கும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 35 விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மற்றும் சோம் பிரகாஷ் ஆகியோர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் விரிவாக ஆலோசித்தனர்.
அப்போது வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 3.30 மணி முதல் சுமார் மூன்று மணி நேரம் வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தங்களது போராட்டத்தை தொடரப்போவதாக விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். அதேநேரம் மீண்டும் மாலை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.







