இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு..!
இஸ்ரேலில் கொரொனா வைரஸ் மற்றும் இன்ப்ளுயன்சா வைரஸ் இணைந்து இரட்டை தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராபின் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல் நிலை மோசமடைந்ததையடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் கொரொனா தொற்றும், இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தொற்றும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரட்டை நோய்த்தொற்றை ஃப்ளோரனா என மருத்துவர்கள் அழைக்கின்றனர். இஸ்ரேலில் ஏற்கனவே நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.






