புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளைஞர் கொலை..!
குடியாத்தம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முத்தமாரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினித். ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர் தன் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் பெண்கள் சிலரை கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை வினித் தட்டிக்கேட்கவே ஆகாஷ் மற்றும் வினித்திற்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினித்தை குத்தினார்.இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனிடைய கொலை செய்தவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.






