10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு..!
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரொனா தொற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் வகைதொகையின்றி கொரொனா பாதித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரொனா கட்டுப்பாடில்லாமல் இருக்கும் சூழலில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.






