--- --:--:-- --

புதுச்சேரியில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!

2

புதுச்சேரி மாநிலத்தில் புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

 

கடந்த மாதம் 7ஆம் தேதி என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அமைச்சர்கள் பதவி தொடர்பாக என் ஆர் காங்கிரஸ், பாஜக இடையே இழுபறி நீடித்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

 

இதனையடுத்து துணைநிலை ஆளுநர் அமைச்சர்கள் பட்டியல் வழங்கப்பட்டதை தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவி ஏற்பு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி மாநிலம் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று எளிமையாக நடைபெற்றது.

 

என் ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லக்ஷ்மிநாராயணன், தேனி ஜெயக்குமார் மற்றும் சந்திரலேகா அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். பாஜக சார்பில் நமச்சிவாயம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

 

அவர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon