--- --:--:-- --

செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்.! உதயநிதியை வர சொல்லுங்கள்..!

3

பூந்தமல்லி அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் கீழே இறங்குவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் கணவரை விட்டு பிரிந்து சொந்த ஊரான கன்னியாகுமரியில் வசித்து வந்தவர் திருவேற்காடு திரும்பி தனது நகைகளையும் பணத்தையும் வழங்குமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

 

பூவிருந்தவல்லியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்க முயன்றபோது அவர்கள் புகார் எடுப்பதற்கு காலதாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் காவல் நிலையம் அருகே இருந்த 200 அடி உயர செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 

தகவலறிந்த காவல்துறையினரும் அவரின் குடும்பத்தினரும் அவரை கீழே இறங்கும்படி பலமுறை கேட்டு சமாதானப்படுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தால் மட்டுமே கீழே இறங்குவதாக திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

பின்னர் பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் தன்னை அனுப்பி வைத்ததாகவும் காணொளி மூலம் உரையாட அவர் தயாராக இருப்பதாகவும் கூறி அந்த பெண்ணை கீழே இறங்க வைத்தார்.

Leave a Reply

Right Menu Icon