கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறை!
கொரொனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கு தடுக்கும் மருந்தும், எதிர்ப்பு மருந்தும் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரான்சின் ஐஎச்யு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியர் டைடியர் ரேஅவுல்ட் தொற்றுநோய் துறை வல்லுனரை புதிய கொரொனா வைரஸுக்கு சிகிச்சை முறையை உருவாக்கும் ஆராய்ச்சியில் அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியது.
நைஸ் மற்றும அவிங்கான் நகரங்களை சேர்ந்த தாங்களாகவே வந்த 24 கொரொனா நோயாளிகள் சிகிச்சை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன. பிளாக் மெயில் என்ற மருந்துடன் இணைத்து மலேரியாவை குணப்படுத்தும் குளோரோக்குவின் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இந்த குளோரோகுவின் மருந்தை பயன்படுத்தி சிகிச்சை அளித்த போது நோயாளிகள் விரைவில் குணம் அடைந்ததாகவும் அவர்கள் வைரசை பரவக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருக்கக்கூடிய கால அளவு பெருமளவு குறைந்ததாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார். நோயாளிகளுக்கு 10 நாட்களுக்கு தினம்தோறும்600 மைக்ரோகிராம் அளவு மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது.

குளோரோகுவின் மருந்துடன் பிளாக் மெயில் மருந்தை பெறாத நோயாளிகள் ஆறு நாட்களுக்குப் பிறகும் நோய்த்தொற்றை பரப்பக் கூடியவர்களாக இருந்துள்ளனர். ஆனால் பிளேக் மருந்தை எடுத்துக் கொண்டவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே ஆறு நாட்களுக்குப் பிறகும் நோய்த்தொற்றை பரப்பக் கூடியவர்களாக இருந்துள்ளனர்.
சோதனை செய்யப்பட்ட இந்த இரு மருந்துகளும் இதற்கு முன்னர் சீனாவின் மருத்துவ சிகிச்சை பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹெச்ஐவி குணப்படுத்த பயன்படுத்தப்படும் கலட்ரா என்ற மற்றொரு மருந்தும் கொரொனாவுக்கான சிகிச்சை பரிசோதனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







