--- --:--:-- --

மக்கள் ஊரடங்கை கொரொனாவுக்கு எதிரான வெற்றியாக கருத வேண்டாம்

7

மக்கள் ஊரடங்கு முடிந்தவுடன் அதை கொரொனாவுக்கு எதிரான வெற்றியாக கருத வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கு பதிலாக கொரொனாவிற்கு எதிரான ஒரு நீண்ட போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் தயாராக இருக்கவேண்டும் என்று அவர் ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மக்கள் ஊரடங்கு ஒரு போராட்டத்தின் துவக்கம் மட்டுமே என குறிப்பிட்டுள்ள நரேந்திர மோடி, நாம் நினைத்தால் மனித சமூகத்திற்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ள கொரொனாவை ஒழிக்க முடியும் என்பதை நாட்டு மக்கள் வெளிக்காட்டுவதாக பாராட்டியுள்ளார்.

 

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்காக வீடியோ வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் மற்ற மாவட்ட மக்கள் தேவைப்பட்டால் மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரொனா பரவலை தடுக்க அடுத்த இரண்டு வாரங்களில் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் வித்துள்ளார். கொரொனா முன்னெச்சரிக்கையாக மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அவர் வலியுறுத்தியுள்ளார். யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனதையும், உடலையும் வலிமையாக வைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon