ஆன்லைனில் கடன் வாங்கி கட்டாத நபரை போலீசில் சிக்க வைக்க நூதன முயற்சி..!
ஆன்லைனில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருந்த நபரை வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் செய்வதாக கூறி நூதன முறையில் போலீசில் சிக்கவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தன்று மாநில கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு பேசியவர் ஜப்பானிலிருந்து பேசுவதாக கூறி மாங்காட்டில் கதர் முகமது வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
வெடிகுண்டு நிபுணர்களுடன் மாங்காடு போலீஸ் சார் சோதனைகள் ஈடுபட்டனர். தொடர்ந்து செல்போன் அழைப்பை வைத்து விசாரித்ததில் கதர் முகமது இரண்டு ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்ததும் விபத்தில் காயம் அடைந்த பின்னர் குடும்பத்துடன் வசித்து வருவதும் அம்பலமானது.
பழைய முகவரியை பயன்படுத்தி ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்ற கதிர் முகமது திரும்பி செலுத்தாமல் இருந்ததன் காரணமாக அந்த நிறுவனத்தினர் இவ்வாறு செய்திருக்கலாம் என காவல்துறையினர் கனித்துள்ளனர்.





