--- --:--:-- --

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!

2

ருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட்டப்படும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது.

 

3 ஆயிரத்து 762 மையங்களில் நடந்த இந்த தேர்வுக்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதியிருந்தனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர்.

 

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் நோய்க்கட்டுப்பாடு பகுதிகளில் இருந்த மாணவர்களுக்கு நேற்று முன்தினம் மறு தேர்வு நடத்தப்பட்டது.

 

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று வெளியிடுகிறது. nta.nic.in மற்றும் ntaneet.nic.in இணைதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon