தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன..!
தமிழகத்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. 60 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆம்னி பேருந்துகள் உள்ள நிலையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள் இயக்கப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே பயணிகள் பேருந்தில் ஏற அனுமதிக்கப்படுவர் என்றும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அதில் பணியாற்றும் தொழிலாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்கு பின் விலக்கு அளித்தால் மட்டுமே பேருந்துகளை இயக்குவோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறியிருந்தனர். விலக்கு கிடைத்ததை தொடர்ந்து இன்று முதல் பேருந்துகளை இயக்குகின்றன.







