--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி ஆராய்ச்சி குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி..!

1.1

கொரொனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி ஆராய்ச்சி குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மூத்த விஞ்ஞானிகளுடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

 

தடுப்பூசி சோதனை நடைமுறைகள் நோய் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார். இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நிதி ஆயோக் சுகாதாரத்துறை உறுப்பினர், தலைமை அறிவியல் ஆலோசகர் மூத்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

அப்போது கொரொனா தடுப்பூசியை தயாரித்து வரும் நிறுவனங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி இது போன்ற முயற்சிக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon