செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கமா என அதிர்ந்து போன நாசா..!
செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை நாசா மேற்கொண்டு வருகிறது. இதற்கான மார்ஸ் லோவர்கள், லேண்டர்கள், ஆர்பிட்டர்களை நாசா பயன்படுத்தி ஒவ்வொரு விதமான ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது.
முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறதா என்றும் ஆய்வுகள் மேற்கொள்ளும். அந்த வகையில்தான் தற்பொழுது இன்ஸைட் மூலம் செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் 4.2 ரிக்டர் அதன்பின்னர் 4.1 ரிக்டர் அளவில் அங்கு பெரிய இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் முழுக்க பல இடங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களை விட இது 5 மடங்கு அதிக ஆற்றல் கொண்டது. அதிக சக்தி வாய்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இது மிக நீண்ட நேரம் ஏற்பட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதற்கு முன் செவ்வாய் கிரகத்தில் இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.





