--- --:--:-- --

ரேசன் கடைகளில் அமலாகும் புதிய நடைமுறை..!

6

நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்க கண் கருவிழி சரிபார்ப்பு முறை உருவாக்கும் திட்டம் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய அவர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆதார் விவரங்களை சரிபார்த்த பின் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் விரல் ரேகை சரிபார்ப்பது தோல்வியடையும் போது கையெழுத்து பெற்று பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

 

மேலும் மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வராத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் வாயிலாக பொருட்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Right Menu Icon