--- --:--:-- --

தஞ்சை அருகே மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி..!

10

ஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் தேர்பவனி நிகழ்ச்சியின் போது சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். அப்பர் மடம் திருவிழாவை முன்னிட்டு சப்பரம் திருவிழா நடைபெற்றது.

 

தஞ்சாவூர் – பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது.

 

வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது. தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர்.

 

புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

 

இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன்,22, முன்னாள் ராணுவ வீரர் பிரதாப்,36, அன்பழகன்,60, இவரது மகன் ராகவன்,24, நாகராஜ்,60, சந்தோஷ்,15, செல்வம்,56, ராஜ்குமார்,14, சாமிநாதன்,56, கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

தகவலறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து களிமேடு கிராமத்திற்கு சென்ற இடத்தை பார்வையிட்டார்.

Right Menu Icon