--- --:--:-- --

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கொலை – மேற்கு மண்டல ஐ.ஜி.

9

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் இருவரைப் போலீசார் 24 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) ரம்யா பாரதி ஐபிஎஸ், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மே 21 அன்று மாலை சுமார் 5:00 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார்.

 

இரவு 8:30 மணியளவில் காவல் அவசர உதவி எண் ‘100’ மூலம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அன்றைய இரவே வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன என்றார்.

Leave a Reply

Right Menu Icon