பூண்டு வெடி போட்டு புயலை கிளப்பிய போதை நபர்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்கில் பூண்டு பட்டாசுகளை வெடித்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கேள்வி கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய்நல்லூர் சாலையில் அமைந்துள்ள இந்த பெட்ரோல் பங்கில் நடந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்கு வரும் மூன்று இளைஞர்கள் மது போதையில் பூண்டு வெடிகளை வீசியது பதிவாகியுள்ளது.
பெட்ரோல் பங்கில் பட்டாசு விபத்து ஏற்படும் என எடுத்துக் கூறிய ஊழியர் திருமலைவாசன் அவர்களை அங்கிருந்து புறப்பட்டு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் திருமலை வாசனை தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.





