பெண்ணுக்கு வந்த மர்ம கால்..நூதன மோசடி..!
சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண்ணின் மென்பொருள் ஊழியரிடம் பேசுவதாக கூறி 18 லட்சத்தை மோசடி செய்த கும்பலிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டனர்.
பெட்டிக்ஸ் கொரியரில் அந்த பெண் மும்பையிலிருந்து பார்சல் அனுப்பியதாகவும் அது காலாவதியான பாஸ்போர்ட்டுகள் போதை பொருள் இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து மும்பை போலீஸ் என்ற பெயரில் பேசிய நபர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டிருப்பதால் பரிசோதனைக்காக அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்ப சொல்லி மோசடியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.





