பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்..செல்போனில் ஆபாச படம் காட்டியவர் கைது..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆரப்பாண்டி குப்பத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிக்கு சென்ற பொழுது ஜாப்ராபாத்தை சேர்ந்த இம்ரான் செல்போனில் ஆபாச படங்களை காட்டி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம்.
அந்த வழியாக வந்தவர்கள் இம்ரானை பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மகளிர் காவல் துறையினர் இம்ரான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.





