--- --:--:-- --

திருமணத்தை மீறிய உறவில் பிறந்த 2 குழந்தைகளை கொன்ற தாய்..!

1

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமணத்தை மீறிய உறவின் மூலம் பிறந்த குழந்தை கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. முத்துமாரிக்கு சசிகுமாருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது.

 

இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் அதனை முத்துமாரி குளத்தில் வீசி கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தையையும் கொன்று புதைத்தது தெரிய வந்தது.

 

முத்துமாரியும், சசிகுமாரும் கைது செய்யப்பட்டனர். உடலை தோண்டி எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட இருவரும் நொச்சிகுளம் கிராமத்தில் குழந்தையை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர்.

 

அங்கு காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் சாக்கு பையில் இருந்த குழந்தையின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. அதனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரித்து வருகின்றனர்

Right Menu Icon