--- --:--:-- --

பெண் குழந்தையை கணவருக்கு தெரியாமல் 50,000 ரூபாய்க்கு விற்ற தாய்!

6

நெல்லையில் பெற்ற தாயே தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி ஆலங்குளத்தில் கணவன் கணேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி ரோஸ்லின் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் சொந்த ஊரான வீரவநல்லூரில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 

பிரிந்துசென்ற மனைவியையும், குழந்தையையும் பார்க்க மூன்று மாதங்களுக்குப் பிறகு கணபதி சென்ற அவர் ரோசலினிடம் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ந்தார். இதுகுறித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்ததுடன் குழந்தை யை யாரோ கடத்தி சென்றதாக கூறியதால் கணேசன் போலீசில் புகார் அளித்தார்.

 

சந்தேகத்தின்பேரில் ரோஸ்லினிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் வறுமை காரணமாக உறவினர் சுரேஷ் மூலமாக பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்த குமார் என்பவரின் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்றது தெரியவந்தது. மேலும் குழந்தை பலரிடம் கைமாறி சென்னைக்கு சென்றதை விசாரணையில் அறிந்த போலீசார் ரோஸ்லின், குமார் உட்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon