மனமகிழ் மன்றங்களில் யூடியூபர்களுக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மனமகிழ் மன்றங்களில் ஆய்வு மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமே வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், யூடியூபர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட தொடர்பில்லாத நபர்கள் அங்கு சென்று வீடியோ எடுப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், மனமகிழ் மன்றங்களில் தேவையற்ற அத்துமீறல்கள் நடைபெறாததை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டப்படி மட்டுமே ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு அடுத்த கட்ட விசாரணை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





