50 நாள் கூட்டணி ஆட்சிக்கு காங். எம்.பி பாராட்டு!
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படும் இந்த 50 நாள் கூட்டணி ஆட்சி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, “இந்த கூட்டணி அரசின் முதல் 50 நாட்கள் மிகவும் உற்சாகமான மற்றும் நம்பிக்கையூட்டும் தொடக்கமாக அமைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் காணப்படாத அரசியல் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
இதன் தொடக்கத்தை, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் போட்டியிலேயே அடித்த அதிரடியான ஓபனிங் ஷாட்டுடன் ஒப்பிடலாம். அது போலவே, இந்த கூட்டணி ஆட்சியும் ‘Fantastic Start’ எடுத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.





