--- --:--:-- --

கன்னியாகுமரியில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வசந்தகுமார் சார்பாக வழங்கப்பட்டது

15

உலக நாடுகள் அளவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வாரமல் இருந்து வரும் சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சகாய நகர் ஊராட்சிக்கு உட்பட்ட குமரன் புதூர்
பகுதியில் உள்ள திருநங்கை காலனியில் உள்ள 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் H,வசந்தகுமார் MP யின் சொந்த செலவில் திருநங்கைகள் சமைப்பதற்கு தேவையான மளிகை பொருட்கள் காய்கறிகளை H,வசந்தகுமார் MP சார்பாக காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர் இதில் சகாய நகர் ஊராட்சி தலைவி மகேஷ் ஏஞ்சல் வட்டார தலைவர் முருகானந்தம். செல்வமணி. ரவிகுமார். ராணி .ஸ்ரீநிவாசன் . ஆனந்த்.ஆரோகயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon