--- --:--:-- --

எல்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கினால் நிதி நெருக்கடி? கார் ரேஸ் நடத்தினால்…? தி.மு.க.,வுக்கு த.வெ.க பதிலடி

9

ரசு சார்பில் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்குவது தொடர்பாக விமர்சித்த தி.மு.க.,விற்கு த.வெ.க ஐ.டி விங் பதிலடி கொடுத்துள்ளது. மக்களைப் பார்க்க எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா? ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?

 

 

ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார் அறிவித்தப் பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா? கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?

 

 

கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா? இதுதான் தி.மு.க.,வின் இரட்டை வேடம். என த.வெ.க ஐ.டி விங் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon