இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அறிவிப்புகள்..!
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் ரமேஷ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் “பழைய கோயில்களில் ரூ.125 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருக்கோயில் பணியிடங்களுக்கு தேர்வு வாரியம் அமைக்கப்படும். திருக்கோயில்களில் காமராஜர் பிறந்தநாளில் பொதுவிருந்து அளிக்கப்படும். ஆழ்வார்கள், சித்தர்கள் பெயரில் விழாக்கள் நடத்தப்படும். திருக்கோயில்களிலேயே பிரசாதம் தயாரிக்கும் திட்டம் விரிவாக்கப்படும்.” என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




