--- --:--:-- --

6 முதல் 10-ம் வகுப்பு வரை புதிய வரைவு பாடத்திட்டம்..!

5

மிழகத்தில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரைவு பாடத்திட்டத்தை ஆய்வு செய்து, கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) அழைப்பு விடுத்துள்ளது.

 

 

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடவாரியான கலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மேற்பார்வையிட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்களின் வழிகாட்டுதலின்படி, 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்களை எஸ்.சி.இ.ஆர்.டி (SCERT) தயாரித்துள்ளது.

 

 

இந்த வரைவு பாடத்திட்டங்கள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnschools.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவற்றை ஆய்வு செய்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். பரிந்துரைகள் அல்லது கருத்துகளை வழங்க விரும்புவோர், அதே இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தின் மூலம் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

கருத்துகளைத் தெரிவிப்பவர்கள், தங்களது தனிப்பட்ட விவரங்களையும் வழங்க வேண்டும். கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆகும். பாடத்திட்ட உருவாக்கப் பணிகள் அடுத்தகட்டத்துக்கு நகரும் முன்பாக, ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளையும் பார்வைகளையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு உள்ளே சென்று, வலது பக்கத்தில் கடைசியாக இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்தால், பாட புத்தகங்களை பார்வையிடலாம். ஒவ்வொரு பாட திட்டத்தையும் தனித்தனியாக க்ளிக் செய்யும் பார்க்கும் வகையில் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பாடத்தினை படித்துவிட்டு, தங்கள் கருத்துக்களை அதிலே தெரிவிக்கவும் ஆப்ஷன கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon