கொரோனா போரில் யாருக்கு வெற்றி..? பிரதமர் மோடி வெளியிட்ட சஸ்பென்ஸ்..!
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட 2ம் கட்ட ஊரடங்கு மே 3ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா ஒழிப்பில் மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. கொரோனா போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போலப் போராடுகிறார்கள்.
அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவ செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. கொரோனா போரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்தமுறை உங்களிடம் பேசுகிறேன் என்றார்.






