வந்தே பாரத் ரயிலில் வெடித்து சிதறிய செல்போன்..!
சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டபொழுது செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மைசூர் செல்லும் வந்தே பாரத் ராயலில் இன்று காலை 8 மணி அளவில் வாணியம்பாடி அருகே வந்து கொண்டிருக்கிறது.
அப்பொழுது ரயிலில் பயணம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்தவர் தனது செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்தி வந்தார். திடீரென செல்போன் சூடாகி பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் படுகாயம் அடைந்த இளைஞர் செல்போன் வெடித்த பொழுது புகை கிளம்பியதால் அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் 35 நிமிட கால தாமதமாக புறப்பட்டு சென்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





