பின்பக்கம் கண்ணாடியே இல்ல.. அதிவேகமாக சென்ற அரசு பேருந்து..!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 20,000-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 8 மண்டலங்கள் மற்றும் 320-க்கும் மேற்பட்ட பணிமனைகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தின் சார்பில் ஒட்டுமொத்தமாக சுமார் 1,900 பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர்ப் பேருந்துகள் என தினசரி 400 முதல் 500 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். எனினும் 70 விழுக்காடு பேருந்துகள் பழையதாகவும் அதிக வருடங்கள் இயக்கப்படுவதால் பெரும்பாலான பேருந்துகள் அடிக்கடி பழுதாகி, தொழில்நுட்பக் கோளாறுகளை உருவாக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சில பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலைகளில் நிற்கும் காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சேலத்தில் அரசு பேருந்து ஒன்று பின்பக்க கண்ணாடி இல்லாமல் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, TN 30 N1263 என்ற எண் கொண்ட எடப்பாடி செல்லும் மகளிர் பேருந்து பின்புற கண்ணாடி இல்லாமல் அதிவேகமாக சென்றுள்ளது. பேருந்து முழுவதும் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





