இருவரை கொடூரமாக தாக்கி கொன்ற புலி..!
இருவரை கொடூரமாக தாக்கி கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லார்ஸ்டன் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 9ஆம் தேதி புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 13 நாட்களில் அடுத்தடுத்து இருவர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில், ரவிச்சந்திரனின் உடலை வைத்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் வனத்துறை மற்றும் காவல் துறையினர் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இருவரை கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க தலைமை வனவிலங்கு பாதுகாவலர் ராகேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஓவேலி சுற்றுவட்டார பகுதியில் 44 இடங்களில் கேமரா பொருத்தி புலியை தொடர்ந்து கண்காணிக்கவும், தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தியும் பிடிக்க தலைமை வனவிலங்கு பாதுகாவலர் அறிவுறுத்தினார். மேலும், 4 கண்காணிப்பு குழுக்கள் புலியின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




