--- --:--:-- --

கணவனுக்கு அறுவை சிகிச்சை..கட்டை பிரித்த மனைவிக்கு அதிர்ச்சி..!

9

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அறுவை சிகிச்சையின் பொழுது காயமடைந்த நபரின் முதுகில் கையுறையையும் சேர்த்து தைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே நெடுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனு.

 

இவரது முதுகில் சில நாட்களுக்கு முன்பு திடீர் என வீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்பொழுது மருத்துவர் ஐந்து நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து கொடுத்து அனுப்பிய நிலையில் வீக்கம் குறையாததால் அறுவை சிகிச்சை செய்தார்.

 

அறுவை சிகிச்சைக்கு பின்பு முதுகில் வழி தீரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதுகு பகுதியில் போடப்பட்டிருந்த கட்டை அகற்றி பார்த்த பொழுது அதில் கையுறையும் சேர்த்து தையல் போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இருவரும் மருத்துவமனை சென்று உயரதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் இது மருத்துவர்களின் தவறல்ல என்றும் சிகிச்சை முறை எனவும் கூறியுள்ளனர். எனினும் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon