தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் இன்று காலை பதவியேற்கிறார்..!
தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் இன்று காலை பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான அணி அதிக இடங்களில் வென்றதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் காலை 9 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். மு க ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
கொரொனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பதவி ஏற்பு விழாவில் பிரமுகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரின் பெயர்களும் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.






