மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் – முதலமைச்சர் விஜய்
தமிழகத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மகளிர் இலவச பயணத்தை விரிவாக்கம் செய்து முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தவெக அரசு ஆட்சிக்கு அமைந்தால் மாநிலம் முழுவதும் பேருந்து இலவசமாக செயல்படும் என முதலமைச்சர் விஜய் அன்றே தேர்தல் வாக்குறுதியாக கூறியிருந்தார். அது எப்போது அமல்படுத்தப்படும் என பொதுமக்கள் காத்து கொண்டிருந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
110 விதியின் கீழ் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், மாநகர் சாதாரண பேருந்துகளில் மட்டும் மகளிர்கள் கட்டணமில்லாமல் பயணித்து வருகிறார்கள். மகளிர் கட்டணமில்லா திட்டத்தை விரிவுப்படுத்தி வெற்றி பயண திட்டத்தை அக்டோபர் 2 முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது. மகளிர் பயண சுதந்திரம் அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது.
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணம் இல்லா பயணத் திட்டத்தில் மாநகரம், நகர்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கிலோ மீட்டர் வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இனிமேல், மாவட்டத்திற்குள் உள்ள எக்ஸ்பிரஸ், எல் எஸ் எஸ், டீலக்ஸ் பேருந்துகள் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கூடுதலாக மாவட்டங்களக்கு இடையே சாதாண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் முன்னேற்றம் முக்கியம் அதற்கு இந்த திட்டம் முக்கியம். வெற்றிப் பயணத்திட்டம் இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவு படுத்தப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொது போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். இதன் மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் கட்டணமில்லா கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணிக்க இயலும் என்று கூறியுள்ளார்.
அதோடு, இந்த வெற்றி பயணம் திட்டத்தில் திருநங்கைகளும் பயணிக்கலாம் என்றும், இத்திட்டத்தின் மூலம் அரசிற்கு 6000 கோடி ரூபாய் செலவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அக்டோபர் 2ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




