--- --:--:-- --

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரொனா உறுதி..!

2

மிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பெருந் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள், முன் களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரொனா செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

கொரொனா உறுதியானதும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon