--- --:--:-- --

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

2

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் நடைமுறையில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது.

 

இதன் காரணமாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்த சூழலில் மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

 

பள்ளி மற்றும் கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம்முதலமைச்சர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அண்டை மாநிலமான கேரளாவில் தளர்வுகள் காரணமாக கொரொனா தொற்று வேகமாக அதிகரித்துள்ள சூழலில் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon