--- --:--:-- --

அதிக விலைக்கு முகமூடி விற்பனை.. மருந்துக்கடைக்கு ரூ.3.08 கோடி அபராதம்

15

சீனாவில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அணியும் முகமூடிகளை மிக அதிக விலைக்கு விற்று ஆக மருந்து கடை ஒன்றுக்கு 4 லட்சத்து 34 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் வேகமாக பரவி வரும் கொரானா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு முகமூடிகளின் தேவை அதிகரித்துள்ளது .

 

இந்த நிலையில் ஆன்லைனில் இந்திய மதிப்பு ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பாக்ஸ் முகமூடி விலை பெய்ஜிங்கில் உள்ள மருந்து கடை ஒன்றில் 8 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்றதாக புகார் எழுந்தது.. கடையில் ஆய்வு செய்து இதை உறுதி செய்த அதிகாரிகள் இந்திய மதிப்பில் சுமார் 3.08 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர்.

 

மேலும் கடந்த 6 நாட்களில் அதிகவிலைக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை விற்றதாக புகார்கள் பதிவாகி உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon