திருச்சி பாஜக பிரமுகர் கொலை – காரணம் என்ன…?
கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் இருப்பதாக ஆதிதிராவிட நல தேசிய ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளார். திருச்சியில் கொலை செய்யப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விஜயரகவன் குடும்பத்தினரை முருகன் நேரில் சந்தித்து கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முருகன் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக விஜயரகு செயல்பட்டதே அவரது கொலைக்கான காரணம் என்று குடும்பத்தினர் கூறியதாக தெரிவித்தார். விஜய் ரகுவின் மகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிட்டாய் பாபு காதலித்து வந்ததும் கொலைக்கான மற்றொரு காரணம் என்று குடும்பத்தினர் குறிப்பிட்டதாக முருகன் கூறியுள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலையாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகன் தெரிவித்தார்.






