--- --:--:-- --

மருதமலை முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்..!

4

முருக பக்தர்களின் 7ம் படை வீடாக விளங்கும் மருதமலை முருகன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருமறை பாராயணம், வேள்வி பூஜையை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

 

பக்தர்கள் குடமுழுக்கு விழாவை பார்வையிடுவதற்கு ஏதுவாக 10 எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருதமலை அடிவாரம் முதல் முருகன் கோயில் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

 

டிரோன் உதவியுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குடமுழுக்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon