3 வயது குழந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவன் கைது..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மூன்று வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். சி.புதுப்பேட்டை சேர்ந்த 52 வயதான அக்னி வீரன் என்பவர் அதே ஊரை சேர்ந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாகத் மீறியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார் அக்னிவீரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.






