--- --:--:-- --

மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் கைது..!

8

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மனநல காப்பகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இவரை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவர் பராமரித்துள்ளார். இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு வயிறு பெரியதாக இருப்பதை கவனித்த நாகம்மாள் பரிசோதனை செய்ததில் பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து விசாரித்ததில் தஞ்சாவூரை சேர்ந்த லக்ஷ்மன் என்பவர் அந்த பெண்ணை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. தொடர்ந்து நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon