வகுப்பறையில் ஆட்டம் போட்ட ஆசிரியர்..! பாலியல் தொல்லை புகார்..!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு உலகநாதன் கலைக்கல்லூரியில் மகேந்திரன் என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் வகுப்பறையில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடிய ஆட்டம் தற்போது வைரலாகி வருகிறது.
இவர் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராக 2015ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். தொடர்ந்து ஒரு மாணவியிடம் செல்போனில் தொடர்புகொண்டு நட்பு வளர்க்க என் வீட்டிற்கு வா என்றும் பேசியுள்ளார்.
அவர் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.





