மாணவர்களுக்கு கூடுதல் ஒரு மணி நேர அவகாசம்..!
பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதில் தேர்வு எழுதும் வகையில் பல்வேறு சலுகைகளை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாணவருக்கு விலக்கு அளிப்பதாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆய்வக உதவியாளர் வைத்துக்கொள்ள அனுமதியுடன் சலுகைகளுக்கு தேர்வுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.





