செல்போனை டேப் போட்டு ஒட்டியுள்ள மம்தா பானர்ஜி..!
பெகாசஸ் மென்பொருள் விவகாரம் பூதாகரமாக இருக்கும் நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது செல்போன் கேமராவை ஒட்டுக் கேட்டுள்ளார்.
மென்பொருள் மூலம் எதிர்கட்சி தலைவர்கள் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேச முடியவில்லை என்றும் கூறினார். செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிஇருப்பதாக கூறிய உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.






