ஓணம் பண்டிகையை கொண்டாடிய மலையாள மக்கள்..!
கொரொனா பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திருநாளான ஓணம் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
கொரொனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு வழக்கமான கொண்டாட்டங்கள் இல்லாவிட்டாலும் கொரொனா பேரிடருக்கு மத்தியிலும் பாரம்பரியத்தை கைவிடாமல் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
புத்தாடை உடுத்தி வீடுகளில் அத்திப்பூ கோலமிட்டு உறவினர்கள் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மலையாள மக்கள் கொண்டாடுகின்றனர். கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளது. ஊஞ்சலாடியும் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கியும் அவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளது. திருவோணம் தினத்தன்று கேரளாவை ஆண்ட மகாபலி மன்னன் மக்கள் நலன் அறிய ஒவ்வொரு வீட்டிற்கும் வருகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.






