நிவர் புயல் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன..!
சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கரையை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே நிவர் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக மறு உத்தரவு வரும் வரை சென்னையில் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






