நீட் தேர்வு முடிவை வெளியிட கூடாது..!
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வரை நீட் தேர்வு முடிவை வெளியிட கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு அளிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசி தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சுகாதாரத்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர் 6 உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த குழு அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்வதது. இதற்கு ஒப்புதல் வழங்கிய தமிழக அரசு ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைத்தது.
இதனிடையே நீட் தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என்று வழக்கறிஞர் பிரசன்னா உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்து உத்தரவை பிறப்பிக்க பிரசன்னா கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.







